சிறைக்குள் கஞ்சா கடத்த முயற்சி: வாலிபர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட சிறைக்குள் அண்ணனை பார்க்க வந்து 12 கிராம் கஞ்சாவை கடத்த முயன்ற மதுரை மாவட்டம் குருவிளாம்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் 24, போலீசார் கைது செய்தனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரின் அண்ணன் பாலகிருஷ்ணன் 26, வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இவரை நேரில் பார்க்க வந்த தமிழரசன் சட்டை பையில் 2 சிறிய பிளாஸ்டிக் கவரில் 12 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து சிறைக்குள் கடத்த முயற்சித்தார். இவரை சிறைக்குள் போலீசார் சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்ததை கண்டறிந்தனர். மேற்கு போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.