உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெடிகுண்டு வைத்திருந்த டீ மாஸ்டர் கைது: விடுதலைப்புலிகளுக்கு தொடர்பா?

வெடிகுண்டு வைத்திருந்த டீ மாஸ்டர் கைது: விடுதலைப்புலிகளுக்கு தொடர்பா?

திருச்சி: திருச்சியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்திருந்த, டீ மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். அவரின் பின்னணியில் விடுதலைப்புலிகள் அல்லது தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.திருச்சி உடையான்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்கிற படையப்பா (44). இவர், கே.கே.,நகரில் உள்ள டீக்கடையில், டீ மாஸ்டராக வேலை பார்கிறார். இவரது வீட்டில் ரகசியமாக வெடி குண்டுகள் தயாரித்து வருவதாக, கே.கே.,நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கே.கே.,நகர் இன்ஸ்பெக்டர் நிக்ஷன், எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ஷீலா மற்றும் போலீசார் நேற்று இரவு ஏழு மணிக்கு உடையான்பட்டியில் உள்ள ராமகிருஷ்ணன் வீட்டை சோதனையிட்டனர்.அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இரண்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை கண்டு போலீஸர் அதிர்ச்சியடைந்தனர். வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராமு சம்பவ இடத்துககு வந்து வெடி குண்டுகளை கைப்பற்றி பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்தார். தொடர்ந்து வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பால்ரஸ் குண்டுகள், வயர் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றம் ஒன்னரை கிலோ வெடி மருந்தை கைப்பற்றினர்.இதுகுறித்து கே.கே.,நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணைகமிஷனர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். ராமகிருஷ்ணனுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். கைப்பற்றிப்பட்ட வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது என போலீஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், அந்த குண்டு வெடித்தால் பெரிய பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. கே.கே.,நகர் பகுதியில் பெரும்பாலும் இலங்கை மற்றும் மலேசிய தமிழர்கள் வசிக்கின்றனர். எனவே, இச்செயலில் விடுதலைப்புலிகள் யாரேனும் ஈடுபட்டுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ