உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்

சொத்துகுவிப்பு வழக்கு: ஜெ நேரில் ஆஜராக வேண்டும்: சுபரீம் கோர்ட்

பெங்களுர்: சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா ‌கோர்டில் ஆஜராக வேண்டும் என சுப்ரீம் உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் கோர்டில் நடந்துவருகிறது. இந்த வழக்கிலிருந்து நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு ஏற்கனவே ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் பெங்களூர் கோர்ட் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இத‌னை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மனு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்டில் நடந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்டவர் கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்குமாறு கூறுவது வழக்கை தாமதப்படுத்தும் செயல் . விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. எனவே நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி