உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகனை கைது செய்ய கோரி மக்கள் முற்றுகை

ஏற்காடு: நிலத்தகராறில் வீடு புகுந்த தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகன் மீது போலீசில் புகார் கூறப்பட்டது. சேலம் மாவட்டம் ஏற்காடு புங்கம்மேட்டைச் சேர்ந்த வேடியப்பன் என்பவரின் மனைவி மாது. இவர் ஏற்காடு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் உறவினர் ஆவார். இவர்களுக்கு ஏற்கனவே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏ. மகன் சதீஷ்(25) என்பவர் தனது ஆட்களுடன் மாது வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இது தொடர்பாக மாது போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் வாழப்பாடி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை