உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது

விபச்சார புரோக்கரிடம் சிறுமியை விற்ற பெண் கைது

ராமநாதபுரம்: மதுரை திருமங்கலம் சிறுமியை விபச்சார கும்பலிடம் முதன்முதலில் விற்பனை செய்த கப்பலூர் காந்திநகரை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சிறுமி ஈஸ்வரியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மூளை சலவை செய்து விபச்சார கும்பலிடம் விற்பனை செய்து, விபச்சாரத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஈடுபடுத்திய திருமங்கலம் அருகே கப்பலூர் காந்திநகரை சேர்ந்த கண்ணன் மனைவி ஒச்சம்மாள்(50) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஒச்சம்மாள்தான் சிறுமியை முதன்முதலில் மதுரை கீழகுயில்குடியை சேர்ந்த விபச்சார புரோக்கர் சத்யாவிடம் ஐந்தாயிரம் ரூபாய் பெற்று கொண்டு சிறுமியை ஒப்படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் வழக்கில் மேலும் 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ