உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இம்மானுவேல் நினைவு நாள் விருதுநகரில் 20 செக் போஸ்ட்

இம்மானுவேல் நினைவு நாள் விருதுநகரில் 20 செக் போஸ்ட்

விருதுநகர் : ராமநாதபுரம் பரமக்குடியில் நாளை நடக்கும் இம்மானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, விருதுநகரில் 20 செக் போஸ்ட்கள் அமைக்கப்பட்டு, துப்பாக்கி போலீஸ் காண்காணிப்பும் போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நாளை நடக்கிறது. இதன் பாதுகாப்பு தொடர்பாக, விருதுநகர் எஸ்.பி. , அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. திண்டுக்கல் டி.ஐ.ஜி., சஞ்சய் மாத்தூர் , திருநெல்வேலி துணை கமிஷனர் மாஸ்டன் லியோ, எஸ்.பி. ,க்கள் விஜயேந்திர பிடாரி(திருநெல்வேலி) நரேந்திர நானா(தூத்துக்குடி) பிரவின்குமார் அபினவ(தேனி) அருண் (கன்னியாகுமரி) நஜ்மல் கோதா(விருதுநகர்) சாமிநாதன் ஏ.டி.எஸ்.பி., பங்கேற்றனர் .திருநெல்வேலி, தூத்துக்குடி, ராஜபாளையம் பகுதியிலிருந்து அஞ்சலி செலுத்த வருவோர் , அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, பார்த்திபனூர் வழியாக பரமக்குடி செல்ல வேண்டும். திறந்த வாகனத்தில் செல்லக் கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் கோஷங்களை எழுப்பக்கூடாது. டூவிலரில் மூன்று பேர் செல்லக்கூடாது. ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டது. இதை காண்காணிக்க விருதுநகர் மாவட்டத்தில் 20 இடங்களில் போலீஸ் 'செக் போஸ்ட்'கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாகன சோதனையில் தூப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை