உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆழ்துளை கிணறுகள் மாயம்வேளாண்மை துறை கைவிரிப்பு

ஆழ்துளை கிணறுகள் மாயம்வேளாண்மை துறை கைவிரிப்பு

சிவகங்கை:வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளில், ஆயிரக்கணக்கானவற்றைக் காணவில்லை என, வேளாண்மைத் துறை கைவிரித்து விட்டது.வறட்சிக்கு இலக்காகும் பகுதிகளில், சிறு, குறு விவசாயிகளை ஊக்குவிக்க, தமிழக அரசு ஆழ்துளைக் கிணறுகளை, 1980ல் வேளாண் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டன.இந்தக் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் நீரை, அதனைச் சுற்றியுள்ள விவசாயிகள் இணைந்து, சங்கங்கள் அமைத்துப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அவற்றை, அந்தந்த விவசாய சங்கங்களே பராமரித்துக் கொள்ள வேண்டும். பராமரிப்புச் செலவாக, நீரினைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் குறைந்த கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என, அரசு உத்தரவிட்டிருந்தது.கிணறு அபகரிப்பு: ஆரம்பத்தில் முறையாகச் செயல்பட்டாலும், சங்கங்களில் அரசியல் தலையீடு காரணங்களால், விவசாயிகள் ஓரங்கட்டப்பட்டு, அந்தந்தப் பகுதி அரசியல்வாதிகள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இந்தக் கிணறுகளில் உள்ள நீரை, தங்களது விவசாயப் பயன்பாட்டிற்குப் போக, அருகில் உள்ள விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர்.விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டால், இத்திட்டத்தின் கீழ் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி மட்டுமே எங்களைச் சார்ந்தது என்கின்றனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிவகங்கை மாவட்டத் தலைவர் ஆதிமூலம் கூறுகையில், ஆழ்துளைக் கிணறுகள் குறித்து, வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டால், வேளாண் துறை மூலம், ஆழ்துளைக் கிணறு போடும் பணி மட்டுமே எங்களைச் சேர்ந்தது. அதனைப் பராமரிப்பது அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பொறுப்பு என்கின்றனர். வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கேட்டால், இது பொதுப்பணித் துறையினர் பணி; எங்களுக்குச் சம்பந்தமில்லை என்கின்றனர். அரசு தலையிட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த இவற்றை மீட்டு, விவசாயிகள் பயன்படுத்த ஆவன செய்ய வேண்டும்'' என்றார்வேளாண்மைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' இத்திட்டத்தின் கீழ் போடப்பட்ட கிணறுகளில் பல கிணறுகள், விவசாயம் இல்லாததால் தூர்ந்து விட்டன. அவை இருக்கும் இடமும் தெரியவில்லை''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை