உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடைக்குள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

ரேஷன் கடைக்குள் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை: விருகம்பாக்கத்தில், ரேஷன் கடைக்குள்ளே ஊழியர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை நீலாங்கரை, செங்கேணியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் துரை, 53. இவர், சென்னை விருகம்பாக்கம் சின்மயா நகர், காளியம்மன் கோவில் தெருவிலுள்ள ரேஷன் கடையில், கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று மதியம் 1.30 மணியளவில், ரேஷன் பொருட்களை விற்ற பணத்தை, கே.கே., நகரில் உள்ள அலுவலகத்தில் செலுத்துமாறு, தன் மகன் சுரேஷிடம் கொடுத்துள்ளார். தந்தை கொடுத்த பணத்தை செலுத்திய பின், கடைக்குத் திரும்பியுள்ளார். அப்போது, கடையின்,'ஷட்டர்' மூடியிருந்ததை கண்டு, சுரேஷ் சந்தேகமடைந்தார். இதையடுத்து, மூடிய ஷட்டரை திறந்து பார்த்த போது, மின் விசிறியில் நயிலான் கயிறால் தந்தை தூக்கிட்டு தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார், துரையின் உடலை மீட்டு, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரேஷன் கடைப் பொருட்கள் விற்ற பணத்தில் குறைவான, 1.10 லட்ச ரூபாயை, துரை செலுத்த வேண்டுமென, அதிகாரிகள் சொல்லியதாக கூறப்படுகிறது. இந்த மன உளைச்சலில், தூக்கிட்டு தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ