உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -20

கிறிஸ்துமஸ் சிந்தனைகள் -20

பிறந்தார் இயேசு கிறிஸ்து

பெத்லகேமில் 2024 ஆண்டுகளுக்கு முன்பு கன்னி மரியாளுக்கு 'இயேசு கிறிஸ்து' பிறந்தார். 'இயேசு' என்றால் 'விடுதலையாக்குபவர்' என்றும், 'கிறிஸ்து' என்றால் 'தீர்க்கதரிசி' என்றும் பொருள். பாவங்களில் இருந்து மக்களை விடுவிக்க சிலுவையில் ரத்தம் சிந்தினார்.அவரது பிறந்த நாளையே கிறிஸ்துமஸ் எனக் கொண்டாடுகின்றனர். அவர் பிறந்த இடத்திற்கு சென்றால் மனதில் அமைதியும், மனம் இயற்கையில் ஈடுபடுவதையும் உணர முடியும்.இரவு நேரக் குளிரில் ஆட்டு மந்தையுடன் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்குத் தான், அவர் பிறந்த நற்செய்தி துாதர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் மேய்ப்பர்கள் இழிவானவர் களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு மரியாதை, குடியுரிமை இல்லை. ஆகவே மற்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு தங்களை பற்றி பதிவு செய்யச் சென்றபோது இவர்கள் செல்லவில்லை. மேய்ப்பர்களின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் இருந்தனர். ஆனால் மேய்ப்பர்களுக்கு ஆண்டவர் முதலிடம் கொடுக்கின்றார். அவர் குழந்தையாக பிறந்த நாளில் நல்வாழ்த்து பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ