உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உள்ளாட்சி தேர்தல் பட்டியல்: சுணக்கம்

உள்ளாட்சி தேர்தல் பட்டியல்: சுணக்கம்

சிவகங்கை: தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் பிரிப்பு விபரங்களை அரசிதழில் வெளியிடுவதில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது.உள்ளாட்சி நிர்வாக பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்., 25உடன் முடிகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான தேர்தல் அந்த மாதத்திற்குள் முடிக்கவேண்டும். இதற்கென வார்டுகள் பிரிக்கும் பணி நடந்து, சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.வார்டுகள் பிரிப்பு குறித்த விபரங்கள் அடங்கிய பட்டியல், மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது. இந்த பட்டியல் ஜூலை 30க்குள் அரசிதழில் வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் இதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பட்டியலை வெளியிட்டால் தான், அடுத்தகட்டமாக கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குதல், சின்னம் அச்சிடுதல் போன்ற பணிகள் துவங்கும்.இதற்கு கால அவகாசம் இல்லாததால், பணிகள் மந்தமாக நடக்கிறது. இதனால், தேர்தல் தள்ளிப்போகும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை