மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
திருப்பரங்குன்றம்: அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் முடித்து, தேர்தலுக்கு தயாராகி விட்டது, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் முன்பு 43 கிராம ஊராட்சிகள் இருந்தன. எல்லை விரிவாக்கத்தில் ஐந்து ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. தற்போதுள்ள 38 ஊராட்சிகளில் 1,01,325 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 50.668, பெண்கள் 50,657 பேர். 345 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பகுதிகளில் 22 ஒன்றிய கவுன்சிலர்கள் 3 மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 20 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு அதிகாரி, ஒரு உதவி அலுவலர், உதவியாளர் நியமிக்கப்பட உள்ளனர். ஒரு மண்டலத்திற்கு 10 பூத்துகள் வீதம் 200 பூத்துகள் அமைக்கப்பட்டு, 2 ஆயிரம் ஓட்டுப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கான ஓட்டுப் பெட்டிகளுக்கு பெயிண்ட் அடிக்கப்படுகிறது. கடந்த தேர்தல்வரை வார்டுக்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு முறை இருந்தது. தற்போது வார்டுக்கு ஒரு உறுப்பினர் தேர்வு முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. இதற்காக கூடுதல் வார்கள் பிரிக்கும் பணி நிறைவடைந்து விட்டது. வார்டுகளின் எண்ணிக்கை, வாக்காளர்கள் விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம் தேர்தலுக்கு தயாராக உள்ளது. இரட்டைப்பதிவு வாக்காளர்கள் நீக்கம்: வாக்காளர்பட்டியலில் இரண்டு முறை பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்களை, நீக்கம் செய்யும் பணி நடந்துவருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்துவருகிறது. தற்போதுள்ள பட்டியலில் பெயரும், போட்டோவும் ஒரே மாதிரியாக இரு முறை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்கள் குறித்து விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது. ஒருவரின் பெயரே பட்டியலில் இருமுறை இடம் பெற்றுள்ளது, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டு உள்ளது.இவற்றை தனியாக பட்டியலிட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் முகவரில் உள்ளனரா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த பணியில் தேர்தல் களபணியாளர்களான நகராட்சி பகுதியில் பில் கலெக்டர்கள், கிராம பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இரட்டைபதிவு குறித்து செப்., 12 க்குள் விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரட்டை பதிவு செய்யப்பட்டுள்ள வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 1 ல் வெளியிடப்படும்.
2 hour(s) ago
2 hour(s) ago