மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
ஆண்டிபட்டி : மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அணை மதகுகளை இயக்கி திறந்து விட்டார். தேனி கலெக்டர் பழனிசாமி, எம்.எல்.ஏக்கள் தமிழரசன், முத்துராமலிங்கம்,லாசர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் தனபால், வைகை அணை உதவி செயற்பொறியாளர் மெய்யழகன், இளநிலை பொறியாளர் கணேசமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.பாசன வசதி: தண்ணீர் திறப்பால் ஒரு லட்சத்து 50 ஆயித்து 43 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். வினாடிக்கு 1,800 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்கள் வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காலை அணை நீர் மட்டம் 58.92 அடியாகவும் (அணை உயரம் 71 அடி) நீர் வரத்து வினாடிக்கு 1,176 கன அடியாகவும் இருந்தது.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3