உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீரபாண்டி ஆறுமுகம் நிபந்தனை தளர்வு

வீரபாண்டி ஆறுமுகம் நிபந்தனை தளர்வு

சென்னை: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு விதிக்கப்பட்ட ஜாமின் நிபந்தனையை, சென்னை ஐகோர்ட் தளர்த்தியது. நில அபகரிப்பு தொடர்பாக, ஜுவல்லரி அதிபர் அளித்த புகாரில், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், சென்னை ஐகோர்ட் ஜாமின் வழங்கியது. சென்னையில் தங்கியிருந்து, பூக்கடை போலீஸ் நிலையத்தில் தினசரி ஆஜராக வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. ஜாமினில் வெளிவந்த வீரபாண்டி ஆறுமுகம், இன்று, சென்னை வந்தார். அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நிலை சரியில்லாததால், நிபந்தனையை தளர்த்தக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் தரப்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், தினசரி, பூக்கடை போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை