மேலும் செய்திகள்
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
3 hour(s) ago | 6
சிதம்பரம் : சிதம்பரம் அருகே, பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியை, முதலை ஒன்று கடித்ததால், அவர் படுகாயமடைந்தார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த புதுப்பூலாமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி,62. இவர், நேற்று மாலை தனது வீட்டின் அருகில் உள்ள, பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்தபோது, நீரில் இருந்த முதலை ஒன்று, அவரின் காலை கடித்துக் குதறி, ஆற்றினுள் இழுத்தது. அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டவுடன், அந்த முதலை தப்பிச் சென்றுவிட்டது. இதில், படுகாயமடைந்த கிருஷ்ணவேணி, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த மாதம், அதே பகுதியில் விஜயகுமார் என்ற மாணவனை முதலை கடித்தது குறிப்பிடத்தக்கது.
2 hour(s) ago
3 hour(s) ago | 6