உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருகனுக்கு மொட்டை:வரிந்து கட்டும் ர.ர.,க்கள்

முருகனுக்கு மொட்டை:வரிந்து கட்டும் ர.ர.,க்கள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன், காங்கிரசில் இருந்து அ.தி.மு.க., விற்கு வந்தவர், பழநி எம்.எல்.ஏ., வேணுகோபாலு. மற்றவர் மனம் கோணாமல் பேசுவது இவரது 'ஸ்பெஷாலிட்டி'. உள்ளாட்சி தேர்தலில், 'கவனித்த' அனைவருக்குமே, 'சீட்' பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் சிலருக்கு மட்டுமே வாக்குறுதி பலித்தது. 'சீட்' கிடைக்காதவர்கள் கண்ணீர் சிந்துவது தனிக்கதை. ஊராட்சி தலைவர் தேர்தலில் கட்சி சின்னம் இல்லாததால், எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், அதில் தலையிடுவது இல்லை. இதிலும் குறுக்குச்சால் ஓட்டினார் எம்.எல்.ஏ., பழநி அருகே சிவகிரிப்பட்டி ஊராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., பிரமுகர் குபேரன் பொன்னுச்சாமி, மாணவரணி பொருளாளர் அக்னிவீரபுத்திரன் மோதுகின்றனர். இதில் இருவருக்குமே மறைமுக ஆதரவு அளித்தார் எம்.எல்.ஏ., இதன் விளைவு, மோதல், தேர்தல் அலுவலகம் சூறை என, ரத்தக்களரியில் முடிந்தது. 'கிடைத்தது வாய்ப்பு,' என, 'சீட்' கேட்டு ஏமாந்தவர்கள், மேலிடத்துக்கு புகாரை தட்டி விட்டு உள்ளனர். 'எம்.எல்.ஏ., வை கட்சியில் 'டம்மி' ஆக்காமல் விடுவதில்லை,' என, பழநி முருகனுக்கு சிலர் நேர்த்திக் கடன் வைத்துள்ளதாக, ரத்தத்தின் ரத்தங்கள் கிசுகிசுக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை