மேலும் செய்திகள்
ம.ஆதனுார் நந்தனார் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்
2 hour(s) ago
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சிறப்பு அம்சம்
3 hour(s) ago | 6
சேலம் : சேலம் மாவட்டத்தில், அரசு கேபிள், 'டிவி'யை பயன்படுத்தும் மக்களிடம் இருந்து கட்டணமாக, 70 ரூபாய்க்கு பதிலாக, 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி' கார்ப்பரேஷன் மூலம், பொதுமக்களுக்கு கேபிள், 'டிவி' சேவை கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இலவச சேனல்கள் மட்டுமே வந்த நிலையில், தற்போது கட்டண சேனல்களும் ஒளிபரப்பாகிறது. முதல்வர் ஜெயலலிதா, '70 ரூபாயில், 90 சேனல்களை பார்க்க முடியும்' என, சட்டசபையில் அறிவித்தார்.
ஒரு மாதம் கடந்த நிலையில், கேபிள், 'டிவி' வசூலுக்கு வரும் ஆபரேட்டர்கள், 100 ரூபாய் கொடுக்க வேண்டும் என, கூறுகின்றனர். அரசு கேபிளில், 'சன் டைரக்ட், ஏர்டெல், டாடாஸ்கை டி.டி.எச்., மூலம், சன் 'டிவி' ஒளிபரப்பு செய்து வருகின்றனர். மேலும், உள்ளூர் சேனல் ஒளிபரப்பும் வந்து கொண்டிருப்பதால், கூடுதலாக கட்டணம் தரவேண்டும் என, அவர்கள் கெடுபிடி செய்வதாக புகார் எழுந்துள்ளது.
அரசு கேபிள், 'டிவி' திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய, மாவட்ட நிர்வாகமும் இதைப்பற்றி கண்டுகொள்ளவில்லை. ஏழை மக்களுக்கு பயனுடையதாக இருக்கும் என்ற எண்ணத்தில் முதல்வர் கொண்டு வந்த திட்டம், பாழாகும் நிலை உள்ளது. 100 ரூபாய், 150 ரூபாய் கட்டணத்தை அதிரடியாக வசூலிக்கும் ஆபரேட்டர்களிடத்தில், மக்களும் கேள்வி கேட்க முடியாத நிலையில் உள்ளனர். காரணம் கேள்வி கேட்டால், அந்த வீட்டு கேபிள் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் மிரட்டல் வருவதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 70 ரூபாய் கட்டணத்தை முறைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2 hour(s) ago
3 hour(s) ago | 6