| ADDED : செப் 06, 2011 11:39 PM
சென்னை: 'ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மாவட்டத்திற்கு, 9ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும்' என, சென்னை கலெக்டர் தெரிவித்துள்ளார். சென்னை கலெக்டர் அண்ணாமலை (பொறுப்பு) வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, 9ம் தேதி (வெள்ளிக்கிழமை) சென்னை மாவட்டத்திற்கு, அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதற்குப் பதில், 10ம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளில் (9ம் தேதி), அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு சிரமம் இன்றி செயல்படும். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.