உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காய்கறி வியாபாரி கொலை

காய்கறி வியாபாரி கொலை

மதுரை: மதுரை வண்டியூர் சவுராஷ்டிராபுரத்தைச் சேர்ந்தவர் நாகு,55. தெற்குவாசல் மார்க்கெட்டில் மனைவியுடன் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். ஆக.,5 அதிகாலை மார்க்கெட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், நாகுவை அடித்ததில் கழுத்து, கன்னத்தின் உள்பகுதியில் ரத்தம் உறைந்து இருப்பதாக தெரியவந்தது. இதைதொடர்ந்து, கொலை வழக்காக மாற்றிய போலீசார், நாகு கடை அருகே வியாபாரம் செய்பவர்கள், வாடிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ