உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூடங்குளம் விவகாரம்: பிரதமருக்கு தெரிவித்து இறுதி முடிவு: நாராயணசாமி

கூடங்குளம் விவகாரம்: பிரதமருக்கு தெரிவித்து இறுதி முடிவு: நாராயணசாமி

சென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தகரையில் செப்.,11ல் துவங்கிய உண்ணாவிரதம் இன்று 11வது நாளை எட்டிய நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, போராட்டக்குழுவினர் சந்தித்து பேசினர்.இந்நிலையில்கூடங்குளம் அணுமின்நிலை‌ய விவகாரம் குறித்து பிரதமர் சார்பில் போராட்டக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்திய மத்திய அமைச்சர் நாராயணன் , முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தப்பின் ‌தலைமைச் செயலகத்தில் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலைய விகாரத்தில் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தேன். ‌முதல்வர் ஜெ. தெரிவித்த ‌கருத்துக்களையும் , பிரதமரிடம் தெரிவிப்பேன், இந்த விஷயத்தில் பிரதமர் இறுதி முடிவு எடுப்பார் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை