உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுக்கு குக்கர் வினியோகம்

ஓட்டுக்கு குக்கர் வினியோகம்

சிவகங்கை: சிவகங்கையில் வாக்காளர்களுக்கு 'குக்கர்', சேலை, அரிசி இலவசமாக கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது.சிவகங்கை மருதுபாண்டியர் நகர், ரயில்வே ஸ்டேஷன் அருகே எம்.ஜி.ஆர்., நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் 'குக்கர்', சேலைகளை இரவு நேரங்களில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வீடுவீடாக வழங்கி வருவதாக தனிப்படை போலீசாருக்கு புகார் செல்கிறது.தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேட்பாளர்கள் குக்கர், சேலை, அரிசியை இலவசமாக தருவதாக, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு புகார் வருகிறது. புகார் வரும் இடங்களுக்கு போலீசாரை அனுப்பி விசாரித்தால், தருவதாக தெரிவிக்கின்றனர். அதற்கான ஆதாரம் இல்லாமல் போலீசார் திரும்புகின்றனர்.வரும் போன் தகவல்களை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ