| ADDED : ஆக 16, 2024 10:51 PM
மக்களால் விரட்டப்பட்டவர்கள் அ.தி.மு.க., தலைவர்கள். தொடர் தோல்விக்குப் பின், தொண்டர்கள் அவர்களை நம்பத் தயாராக இல்லை. தோல்விக்கு பயந்துதான், விக்கிரவாண்டி இடைத்தேர்தலையே அ.தி.மு.க., புறக்கணித்தது. இதனால் கலகலத்திருக்கும் கட்சியில் இருந்து பலரும் ஓடி விடாமல் தடுப்பதற்காகவே, எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் சந்திப்போம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தமிழகத்தில் இனி தி.மு.க., கூட்டணி தான் எந்தத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும் என்பது, அவருக்கு நன்கு தெரியும். கவர்னர் நடத்திய தேநீர் விருந்தில் தி.மு.க., கலந்து கொள்ள வேண்டாம் என்றே முடிவெடுத்தது. ஆனால், கவர்னரே முதல்வரை தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்ததால், மரியாதை நிமித்தமாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். அமைச்சரவை மாற்றம் என்றாலும், கவர்னரை தான் சந்திக்க வேண்டும். கவர்னர் மாளிகையில் தான் பதவி பிராமனம் செய்ய வேண்டும். அதனால், கவர்னரை புறக்கணிக்க முடியவில்லை. மற்றபடி, பா.ஜ.,வுக்கு பயந்து எதுவும் நடக்கவில்லை.ரகுபதி, சட்டத்துறை அமைச்சர்