உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆய்வுக்குழு புகார்

ஆய்வுக்குழு புகார்

மதுரை:மதுரை மாவட்டம் திருமங்கலம் சிவரக்கோட்டையில் விவசாய நிலங்கள், கரிசல்குளம் கண்மாயை வக்கீல்கள் பகத்சிங், பெரியசாமி, கல்வியாளர் ஜெயராமன், சமூக ஆர்வலர் பாண்டியன், பொறியாளர் சு.தளபதி கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.அவர்கள் கூறியதாவது: சிவரக்கோட்டையில் கரிசல்குளம் கண்மாய் நீரை நம்பி விவசாயம் நடக்கிறது. மத்தியமைச்சர் அழகிரி கல்வி அறக்கட்டளையின் தயா பொறியியல் கல்லூரிக்காக நான்கு வழிச்சாலை அருகே விளைநிலங்கள் மலிவு விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. அங்கு கட்டுமான பணி 2009 ல் துவங்கியது. கட்டடம் கட்டும் போது கண்மாய் நான்காவது மடையிலிருந்து நீர் வெளியேறும் கால்வாய்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து கலெக்டர் சகாயத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி