உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 மாவட்டங்களில் மழை அடிச்சு வெளுக்க போகுதாம்: வானிலை மையம் எச்சரிக்கை

10 மாவட்டங்களில் மழை அடிச்சு வெளுக்க போகுதாம்: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (மே 13) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று (மே 13)

கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை( மே 14)

திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

29 டிகிரி செல்சியஸ்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mahendran Puru
மே 14, 2024 13:50

வரட்டும் வரட்டும் மழை, வரட்சி போகட்டும்


Lion Drsekar
மே 13, 2024 15:26

கடந்த ஆண்டுகளில் எல்லா நதிகளையும் இணைந்திருந்தால் ? அதே ஒன்று மற்ற மாநிலங்களில் பொழியப்போகும் மழை நீரையும் பாரதம் முழுவதும் ஓட செய்திருக்கலாமே ? தேசத்தின் ஒற்றுமைக்கு வல்லபாய் பட்டேல் எல்லா மன்னர்களையும் உள்ளே வைத்து மிரட்டி , பணியவைத்து அவர்களிடம் இருந்து ஆட்சியைப் தற்போது உள்ள மா மற்றும் குறுநில மன்னர்களிடத்தில் கொடுத்தது போல், நாட்டின் விவசாயமண் மட்டுமே முக்கிய பங்கு எனவே இதற்க்கு எதிர்க்கு தெரிவிக்க முன்வந்தால் வல்லபாய் படேல் போன்று என் நடவடிக்கை எடுக்கக்கூடாது ? சரி நீதித்துறையிடத்தில் கூறி அதிககாரபூர்வகமாக என் நடவடிக்கை எடுத்து ஒன்றினைக்கக்கூடாது ? வந்தே மாதரம்


Rengaraj
மே 13, 2024 16:09

தேச நலன் ஒன்றே குறிக்கோள் என்று அனைத்து மாநிலங்களும் நினைக்கவேண்டும் அல்லவா ? அப்போதுதான் நீங்கள் நினைப்பது சாத்தியமாகும் அதோடு மத்தியில் ஆட்சிபுரியும் கட்சிக்கு பாராளுமன்றத்தில் மற்றும் ராஜ்யசபாவில் அசுரபலத்தில் பெரும்பான்மை இருக்கவேண்டும் இந்திரா மறைவுக்கு பிறகு காங்கிரஸ்க்கு அது கிடைத்தது அப்போது அது எதுவும் செய்யவில்லை அதன்பிறகு எந்தக்கட்சிக்கும் அப்படி ஒரு பெரும்பான்மை கிடைக்கவில்லை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை