உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேர்களை தேடி திட்டத்தில் 100 பேர் தமிழகம் வருகை

வேர்களை தேடி திட்டத்தில் 100 பேர் தமிழகம் வருகை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ், தமிழகம் வந்துள்ள, 15 நாடுகளை சேர்ந்த, 100 அயலக தமிழ் இளைஞர்களின் சுற்றுப்பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டு, தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில், தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, அரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுவர்.கடந்த ஆண்டு நான்கு நாடுகளைச் சேர்ந்த, தமிழ் இளைஞர்கள் வந்தனர். நடப்பாண்டு இரண்டாம் கட்ட பயணத்திற்கு, 15 நாடுகளைச் சேர்ந்த, 100 வெளிநாட்டு தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் நேற்று முதல் 15ம் தேதி வரை, மாமல்லபுரம், கடலுார், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில், முக்கிய சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இப்பயணத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு துணிகள், பயணக்குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டைகளை வழங்கினார்.தமிழக அரசின், 'வேர்களைத் தேடி' திட்டத்தின் கீழ், 15 நாடுகளில் இருந்து தமிழகம் வந்துள்ள, 100 தமிழ் இளைஞர்களின் சுற்றுப்பயணத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அருகில், அமைச்சர் மஸ்தான், தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

DUBAI- Kovai Kalyana Raman
ஆக 02, 2024 08:27

அவர்கள் சுத்தி பார்க்க மக்கள் வரி பணம்? அத இங்குள்ள ஏழை மக்களுக்கு, மாணவர்களுக்கு செலவு அளிக்கலாம் ..இது போல தேவை இல்லாத திட்டம், செலவை நிப்பாட்டி, ஏழை மக்களுக்கு பயனுள்ள திட்டம், தொழில் தொடங்க உதவி பண்ணா நல்லாயிருக்கும்


அப்புசாமி
ஆக 02, 2024 07:57

இங்கே கொடுமை தாங்க முடியாமத்தானே வெளிநாட்டுக்கு ஓடிப்போனாங்க?


Senthil
ஆக 02, 2024 07:13

The ghee belonging to others is distributed through the hands of my wife as stated in Tamil ooran veettu neiye en pondatti kaiyee


பெரிய குத்தூசி
ஆக 02, 2024 07:05

எந்த ஆணி வேரை தேடப்போகிறார்கள். திமுக காரன் எதையாவது செஞ்சா உள்லாடி ஏதாவது பிரிவினைவாத சதி, மதமாற்றம், இந்து கலாச்சாரத்தை ஒழிக்கும் அல்லது பெரும் ஊழல் அடங்கியிருக்கும். மத்திய உளவுத்துறை வேரை தேடி போறாங்கிற பேர்ல வர வெளிநாட்டு பேர்வழிகளையும், மஸ்தானையும் கண்காணிக்கணும்.


Kannan
ஆக 02, 2024 08:01

நன்றி


Kasimani Baskaran
ஆக 02, 2024 05:49

இதனால் ஓரிருவர் பயன் பெறுவார்.


செல்வேந்திரன்,அரியலூர்
ஆக 02, 2024 06:44

அதே மாதிரி இந்த வேர்களை தேடி திட்டத்தின் கீழ் கருணாநிதியின் பூர்வீகமான ஆந்திர மாநிலத்தில் இருக்கும் ஓங்கோல் மாவட்டத்தில் உள்ள குக்கிராமமான ஜெருக்கொம்ம பாளையத்தில் இருக்கும் கருணாநிதியின் முன்னோர்களின் வாரிசுகளையும் அழைத்து கவுரவிக்க வேண்டும்.


Amruta Putran
ஆக 02, 2024 04:03

What about Kalaignar Samadhi, Anna Samadhi, Periyar Thidal?


மேலும் செய்திகள்





புதிய வீடியோ