மேலும் செய்திகள்
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
03-Mar-2025
சென்னை:'வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக, 9 செ.மீ., மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகத்தில், 7; கடலுார் மாவட்டம் பரங்கிப்பேட்டையில், 6; திருவாரூர் மாவட்டம் நன்னிலம், கள்ளக்குறிச்சி ஏ.ஆர்.ஜி., திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதிகளில் தலா, 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காலை லேசான பனி மூட்டம் காணப்படும். மார்ச், 17 முதல், தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில், இன்று வெப்ப நிலை குறையக்கூடும். சென்னையில் பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்ப நிலை, 35 டிகிரி செல்ஷியஸ் ஒட்டி காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வேலுாரில் வெயில் சதம்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுாரில், 101 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. அடுத்தபடியாக, திருப்பத்துாரில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
03-Mar-2025