உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) முதல் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்ரல் 25) முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 25) முதல் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 5 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:

* வேலூர்,* ராணிப்பேட்டை,* திருப்பத்தூர்,* கரூர்,* திருவண்ணாமலை,* தர்மபுரி,* சேலம்,* ஈரோடு,* திருச்சி,* நாமக்கல்,* கள்ளக்குறிச்சி,* பெரம்பலூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Puthumugam Vasu
ஏப் 25, 2024 15:05

வெயில் காலத்தில் வயதானவர்கள் குழந்தைகள் கவனமாக இருக்கவும் வெளியில் போவதை தவிர்க்கவும்


மேலும் செய்திகள்