உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1,085 மனுக்கள் ஏற்பு; 664 நிராகரிப்பு

1,085 மனுக்கள் ஏற்பு; 664 நிராகரிப்பு

சென்னை:தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. பெறப்பட்ட 1,749 வேட்பு மனுக்களில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகள், விளவங்கோடு சட்டசபை தொகுதி, புதுச்சேரி லோக்சபா தொகுதி ஆகியவற்றுக்கு, ஏப்ரல் 19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 20ம் தேதி துவங்கியது; நேற்று முன்தினம் நிறைவடைந்தது.தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில், 1,403 வேட்பாளர்களிடம் இருந்து, 1,749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இவற்றில், 237 மனுக்கள் பெண் வேட்பாளர்கள் தாக்கல் செய்தவை.நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உட்பட சில வேட்பாளர்களின் மனுக்களை ஏற்க, மாற்று கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பல இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது. முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. பல வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். மொத்தம், 39 லோக்சபா தொகுதிகளில் பெறப்பட்ட, 1,749 வேட்பு மனுக்களில், 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன; 664 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.வேட்பு மனுவை வாபஸ் பெற விரும்புவோர், நாளை மாலை 5:00 மணி வரை மனுவை வாபஸ் பெறலாம். அதன்பின் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். சின்னம் ஒதுக்கப்பட்டதும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.இடைத்தேர்தல் நடக்கும் விளவங்கோடு சட்ட சபை தொகுதியில், 22 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. நேற்று 14 மனுக்கள் ஏற்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்