| ADDED : ஜூன் 29, 2024 02:28 AM
சென்னை:பழமையான மற்றும் வழக்கத்தில் இல்லாத, 111 சட்டங்களை ரத்து செய்வதற்கான, சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.சட்டசபையில் நேற்று, 1964ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார நுகர்வு மீதான வரி விதிப்பு திருத்த சட்டம்; 1972ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில வரி திருத்த சட்டம்; 1974ம் ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி திருத்த சட்டம்; 1975ம் ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி திருத்த சட்டம்; 1995ம் ஆண்டு சென்னை மாநகர காவல் திருத்த சட்டம்; 1995ம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட காவல் திருத்த சட்டம் உட்பட, 111 சட்டங்களை ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை, அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.இந்த சட்டங்கள், பழமையானதாகவும், வழக்கத்தில் இல்லாமல் போய் இருப்பதாலும், இவற்றை நீக்க தமிழ்நாடு மாநில சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதை ஏற்று சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.