உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்

மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மரணம்

திருச்சி:திருச்சி, சோமரசம்பேட்டை அருகே மல்லியம்பத்து ராதிகா, 44, கொசவந்திடல் செல்வி, 48, ஆகிய இருவரும் விவசாய தொழிலாளர்கள். நேற்று, எட்டு மாந்திடல் பகுதி வாழை தோட்டத்தில், உரம் வைக்கும் வேலைக்கு சென்றனர்.அப்போது, வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அருகில் இருந்தவர்கள், மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து, இறந்த வர்களின் உடல்களை மீட்டனர். சோமரசம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை