உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாணவர்களிடம் மத பிரசாரம் 27 பேர் போலீசில் ஒப்படைப்பு

மாணவர்களிடம் மத பிரசாரம் 27 பேர் போலீசில் ஒப்படைப்பு

தஞ்சாவூர்: பேராவூரணி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், மத பிரசாரம் செய்தவர்களை பா.ஜ.,வினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், துறவிக்காடு, மதுக்கூர், கரூர் பகுதியில் இருந்து கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த 40 பேர், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே திருச்சிற்றம்பலம், மடத்திக்காடு, களத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், மத பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று முன்தினம் மடத்திக்காடு பகுதியில் துண்டு பிரசுரங்களை வழங்க சென்ற போது, கிராம மக்கள் அவர்களிடம் பிரச்னை செய்ததால், மத பிரசார கும்பல் திரும்பினர்.தொடர்ந்து மாலையில், களத்துார் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி முன் நின்று, பள்ளியை விட்டு வெளியே வந்த மாணவ - மாணவியரிடம் துண்டு பிரசுரம் வழங்கினர். ஹிந்து மத கடவுள்களை பற்றி தரக்குறைவாக பேசி, மூளைச் சலவை செய்ய முயன்றனர்.இது குறித்து அறிந்த களத்துார் பகுதி கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர், பா.ஜ.,வினர் மத பிரசாரம் செய்தவர்களை தடுத்து நிறுத்தினர். போலீசாருக்கு தகவல் அளிப்பதாக கூறியதால், 13 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, 27 பேரை பிடித்து, திருச்சிற்றம்பலம் போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

karthik
பிப் 27, 2025 12:51

இப்படி தான் அந்த பெண் குழந்தையை டார்ச்சர் பண்ணி தற்கொலை செய்யவச்சானுங்க.. அப்படியே மூடி மறைச்சுட்டானுங்க.


தமிழன்
பிப் 23, 2025 20:52

இங்கிலாந்திலோ அமெரிக்காவிலோ இயேசுவைப் பற்றி பரப்புரை சொல் அவனை ஒரு பைத்தியக்காரனாக நினைப்பார்கள். அங்கு சாரை சாரையாக கிறிஸ்தவ மதத்தை விட்டு வெளியேறிக் கொண்டுள்ளனர் ஆனால் இங்கு வெளிநாட்டு பணத்தை ஏழை குழந்தைகளுக்கு உதவி செய்வதாக பொய் சொல்லி வசூல் செய்து மதப் பிரச்சாரம் செய்து வருகின்றனர் இன்னும் சிறிது காலத்தில் கிறிஸ்தவ மதம் என்பது இந்தியாவில் மட்டும் தான் இருக்கும் இங்கிலாந்து அமெரிக்காவில் கிருத்துவ மதம் நூற்றாண்டுகள் கழித்து இருப்பதற்கான வாய்ப்புகளே இல்லை.


Kalyanaraman
பிப் 23, 2025 08:47

ஆண்மையற்ற, முதுகெலும்பு அற்ற நமது சட்டங்கள் இருக்கையில் இவர்களை போலீஸ் என்ன செய்து விடும்?


Yes your honor
பிப் 23, 2025 11:51

போலீசே அப்படித்தான் உள்ளது.


Sankar Ramu
பிப் 23, 2025 08:20

மத மிருகங்களை நாடுகடத்த வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை