உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / த.மா.கா.,வுக்கு 3 தொகுதிகள்

த.மா.கா.,வுக்கு 3 தொகுதிகள்

சென்னை:தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே.வாசனின் த.மா.கா.,வுக்கு, மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் உடன் தொகுதி பங்கீடு குறித்து, சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, முருகன், மாநில தலைவர் அண்ணாமலை நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர்.அதில், த.மா.கா., மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்புக் குழு ஆகியவற்றுடன் மட்டும் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது. வாசனுடன் பா.ஜ., மேலிட தலைவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து, த.மா.கா.,வுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை, பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி