உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

ஒன்றரை கோடி ரூபாய் அபராதமா... எல்லை மீறும் இலங்கை அரசு; எச்சரிக்கும் அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட 3 தமிழக மீனவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை அரசுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அபராதம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ஆகஸ்ட் 27ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரில், மூவர் ஏற்கனவே ஒருமுறை கைது செய்யப்பட்டவர்கள் என்று கூறி அவர்களுக்கு தலா ரூ.1.50 கோடி அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீண்டும் மீண்டும்

ஏற்கனவே தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு தலா ரூ.3.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும், மீண்டும் அபராதம் விதிப்பது கண்டிக்கத்தக்கது.

பேச்சுவார்த்தை

நான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே இலங்கை அரசு இவ்வாறு செய்கிறது. இலங்கை அரசின் இந்த அட்டகாசத்தை இனியும் அனுமதிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள், இலங்கை மீனவர்கள், தமிழக அரசு, இலங்கை அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுக்களுக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

vaiko
செப் 05, 2024 23:14

அப்படியானால் ஜெய்ஷ்ங்கர், அஜித் தோவலுக்கு வாழைப்பழம் சாப்பிடும் வேலையா?


Ramesh Sargam
செப் 05, 2024 19:10

முதலீடு திரட்ட பல வெளிநாடுகளுக்கு செல்லும் நமது முதல்வர், மத்திய அரசு அனுமதியுடன் ஒரு முறை ஸ்ரீ லங்கா சென்று அங்குள்ள ஆட்சியாளர்களிடம் மற்றும் ராணுவத்தினரிடம் பேசி ஏன் ஒரு நிரந்தர முடிவு காண முயலக்கூடாது? மீனவர் பிரச்சினை என்றால் உடனே நமது உதல்வர் மோடிக்கு கடிதம் எழுதுவார். அதைவிட்டு ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை.


தமிழ்வேள்
செப் 05, 2024 16:44

இந்த மீனவர்களை கடத்தலுக்கு பயன்படுத்திய திராவிட பெரிய மனிதர்கள் ஒன்றரை கோடியை செலுத்தினால் என்ன ? அவர்களுக்கு இது ஒட்டடை கொம்புக்கு சமம் தானே ?


mindum vasantham
செப் 05, 2024 16:37

ஜெயாவை கொலை செய்தார்கள் என்று கூறி ஆட்சிக்கு வந்த அரசு குற்றவாளியை கண்டுபிடிக்கவில்லை , நீட் விளக்கு வாங்கியதா அரசு ,டுபாக்கூர் அரசு நீக்கப்பட வேண்டும்


Sundar R
செப் 05, 2024 16:12

பாகிஸ்தான், வங்காளதேசம் & சீன எல்லையைக் கடந்து வருபவர்களை இந்த மாதிரி கைது செய்து அபராதம் விதித்தால் நம் நாட்டின் வருமானம் உயரும். அன்னிய நாட்டினர் நம் நாட்டின் எல்லைக்கோட்டினை கடக்க அஞ்சுவார்கள்.


Narayanan
செப் 05, 2024 16:11

இலங்கை அரசு நிதானத்துடன்தான் நடந்துகொள்கிறதா ? ஒரு மீனவன் அவன் என்ன கோடீஸ்வரனா அவன் கோடீஸ்வரான இருந்தால் ஏன் மீன் பிடிக்கவருகிறான் ? கொஞ்சமாவது மூளையை வேலைவாங்கி இந்த மாதிரியான தீர்ப்பை சொல்லுங்கள் . இலங்கையும் இந்தியாவும் பரஸ்பரம் நட்பு நாடு. இருவரும் கைது என்ற நடவடிக்கைக்கு போகாமல் விரட்டி விடுங்கள் . அடிக்கடி இந்த மாதிரி நடப்பது அசிங்கமாக இருக்கிறது நட்பு நாடு என்று சொல்லிக்கொள்வதற்கு .


Sainathan Veeraraghavan
செப் 05, 2024 15:43

அன்புமணி அவர்கள் தனக்கு இன்னமும் அரசியலில் ஏதோ செல்வாக்கு இருப்பது போல் காட்டி கொள்கிறார். பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த தேர்தலுக்கு இருக்குமா என்பதே தெரியாது


R S BALA
செப் 05, 2024 14:53

இனி எப்போதும் இந்திய மீனவர்கள் என்று குறிப்பிட்டு பேசுங்கள் தமிழக அரசியல்வாதிகளே..


அ.ஸ்வின்
செப் 05, 2024 14:37

தில் இலலாத மத்திய மாநில அரசுக


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 05, 2024 14:19

ஒன்றை கோடி என்பது இந்திய மதிப்பில் ஐம்பதாயிரம் ரூபாய்.


Rajamani K
செப் 05, 2024 16:26

தவறு. கிட்டாத தட்ட 50 லட்சம். ஒரு இந்தியா ரூபாய் = 3.55 ஸ்ரீலங்கா ரூபாய்