மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
14 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
சிவகாசி: சிவகாசி அருகே மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் நாரணாபுரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் சுரேஷை கொலை செய்த நான்கு பேரை போலீசார் 2 மணி நேரத்தில் கைது செய்தனர்.சிவகாசி அருகே நாரணாபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் 36. தனியார் பஸ் டிரைவராக இருந்தார். நேற்று முன்தினம் சிவகாசி சாத்துார் ரோட்டில் ஒரு கட்டடத்தின் அருகே பிணமாக கிடந்தார். தகவலறிந்த கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.போலீசார் நடத்திய விசாரணையில் சுரேஷ் மற்றும் 56 வீட்டு காலனியை சேர்ந்த பால கணேஷ் 28, சுப்ரமணியபுரம் காலனி நந்தகுமார் 26, நாரணாபுரம் முனீஸ்வரன் காலனி கார்த்தீஸ்வரன் 21, பழனிச்சாமி 28, ஆகியோர் ஒன்றாக மது அருந்தி உள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் மற்ற நான்கு பேரும் சுரேஷை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்தது தெரிந்தது.இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையிலான தனிப்படையினர் நாரணாபுரம் காட்டுப் பகுதியில் பட்டாசு கடைகள் அருகே பதுங்கி இருந்தவர்களை பிடிக்க சென்றனர். அப்போது பட்டாசு கடையின் மேலிருந்து பாலகணேஷ் கீழே குதித்து தப்பி ஓட முயலும் போது கால் முறிந்தது. போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, பால கணேஷை சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொலையில் தொடர்புடையவர்களை 2 மணி நேரத்தில் பிடித்த தனிப்படையினரை எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.
3 hour(s) ago | 3
14 hour(s) ago | 1
14 hour(s) ago