உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் ஆந்திர நபர்கள் 5 பேர் கைது

ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல் ஆந்திர நபர்கள் 5 பேர் கைது

திருவாரூர்:திருவாரூரில், தனியார் தங்கும் விடுதியில், கஞ்சாவுடன் ஆந்திராவைச் சேர்ந்த ஐந்து பேர் தங்கி இருப்பதாக, தேசிய போதை தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, ஆந்திர நபர்கள் தங்கி இருந்த இரண்டு அறைகளை, போலீசார் சுற்றி வளைத்தனர்.சோதனை செய்ததில், 1 கோடி ரூபாய் மதிப்பிலான, 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்த இருந்தது கண்டறியப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட, ஆந்திர மாநிலம், கடப்பா பாலகோலானு விஷ்ணுவர்த்த ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.நாகை மாவட்டம், கோடியக்கரை அல்லது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் வழியாக, இலங்கைக்கு கஞ்சாவை கடத்த இருந்தது தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா, தமிழகத்தில் பல சோதனை சாவடிகளை கடந்து வந்துள்ளது. இது தமிழக போலீசாருக்கு தெரியாமல் போனது ஆச்சரியமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ