உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 84 ஊர்களில் 808 பேர் கைது 15,000 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிப்பு

84 ஊர்களில் 808 பேர் கைது 15,000 லிட்டர் சாராயம், ஊறல்கள் அழிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் 84 இடங்களில், கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 808 பேர், கைதாகியுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g2lmmhn2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்திய, 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, கலெக்டர் மாற்றப்பட்டார். சாராயம் விற்பனை செய்த நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விவகாரத்தில் போலீசார் மட்டுமின்றி, அந்தந்த பகுதி அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.இதன்படி, புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு போலீசார் உடையாளிப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஆதனக்கோட்டையைச் சேர்ந்த வீராசாமி, 50, என்பவரை மடக்கி விசாரித்தனர். அவர், 60 லிட்டர் சாராயத்தை மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மருத்துவக் கல்லுாரி அருகே காட்டுப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே பச்சமலையில் உள்ள நெசக்குளம் பகுதியில், 250 லிட்டர் சாராயம் மற்றும் ஊறலை போலீசார் அழித்தனர். கடந்த இரண்டு நாட்களில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம், கடலுார், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில், 84 இடங்களில் போலீசார் சோதனை நடத்திஉள்ளனர். அதில், 876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 808 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும், 3,000 லிட்டர் சாராயம்; 12,000 லிட்டர் ஊறல் என, 15,000 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுஉள்ளது.

போலீசார் கூறியதாவது:

அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில், அதிகளவு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு பாக்கெட் 60 ரூபாய் என்ற குறைந்த விலையில் கிடைப்பதால், கள்ளச்சாராயத்தை அதிகம் பேர் குடிக்கின்றனர்.கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தொடர்ந்து சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சாராயம் குடித்ததாக மருத்துவமனைக்கு வருவோரின் வாயிலாகவும், விற்பனை செய்யும் நபர்களை கண்டறிய போலீசார் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னையில் இருந்து

மெத்தனால் விற்பனை?தமிழகத்தில் இருவேறு விதமான கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. அதில், காய்ச்சப்படும் சாராயம் ஒருபுறம் இருந்தாலும், 1 லிட்டர் மெத்தனாலில், 100 லிட்டர் தண்ணீர் கலந்து விற்பனை செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில், புதுச்சேரியில் இருந்து வாங்கப்பட்ட மெத்தனால் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தமி ழக அரசு அறிவித்தது. அதேநேரம், மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்துக்கு, சென்னையில் இருந்து மெத்தனால் வாங்கப்படுவது, போலீசாரின் விசாரணை யில் தெரிய வந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

rsudarsan lic
ஜூன் 23, 2024 13:09

போலீஸ் காரர்களின் மனைவிமார்களை கேட்டால் எவ்வளவு வருமானம் நஷ்டம் என்பது தெரியும்


Ambedkumar
ஜூன் 23, 2024 12:30

டாஸ்மாக் சரக்கோ, கள்ளச்சாராயமோ - இவற்றிற்கெல்லாம் உடந்தையாக இருப்பவர்களின் சந்ததிகள் அழியும்


vazhka thamilakam
ஜூன் 23, 2024 12:19

nalla sales nu sollunga


rasaa
ஜூன் 23, 2024 11:16

கண் துடைப்பு. இது போன்ற நிகழ்வு இன்னும் 6 மாதத்தில், 10 மாதத்தில் நடக்கத்தான் போகின்றது. "இளம் விதவைகள்" அதிகரிக்கத்தான் போகின்றார்கள். நம் வரிப்பணம் வீணாகத்தான் போகப்போகின்றது.


கூமூட்டை
ஜூன் 23, 2024 10:29

இது தான் கூமூட்டை திராவிட முன்னேற்றக் மாடல்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 23, 2024 10:04

இதை முன்பே செய்திருந்தால் இத்தனை உயிர்ப்பலிகளைத் தடுத்திருக்கலாமே ????


MADHAVA NANDAN
ஜூன் 23, 2024 09:48

கள்ளசாராயத்தினை காரணம் காட்டி திமுக, அதிமுக மற்றும் இதர கூட்டாளிகளுக்கும் காவல்துறை உட்பட வயிற்றில் எரிசாராயத்தை ஊற்றிவிட்டிர்களே இது நியாயமா? 200 குடும்பங்களின் அரசு நிவாரணம் வெறும் 2000000001000000 X 200தானே அனால் கட்சி கூட்டாளிகள் காய்ச்சும் தொழிலாளர்கள் கறக்கும் காவல் ஆய்வாளர்கள் என குறைந்தது 200000 குடும்பங்களின் வயிற்றல் அடித்துவிடாதீர்கள் கருணைகாட்டுங்கள் ஒரு நாடும் நாட்டின் அரசும் நன்றாக இருக்க வேண்டுமென்றால் சில உயிர்பலிகளை கண்டுகொள்ளாதீர்கள் மக்களே மனிதாபிமானத்துடன் மனமிறங்குங்கள் எங்களை மன்னித்து, வரும் இடைத்தேர்தலில் அடுத்து வரும் அணைத்து தேர்தலிலும் மறக்காமல் வாக்களித்து உங்கள் வருங்கால சந்ததிகளின் விடியலுக்கு விடை தேடுங்கள் என்ற உத்திரவாத குரல் உங்கள் செவிகளை விரைவில் எட்டும். நம்புங்கள் நாங்கள் தான் வருவோம் நல்ல எதிர்காலம் தருவோம் அதோடு எங்கள் நிவாரணம் இனிவரும் காலங்களில் நிச்சயம் இரட்டிப்பாக்கப்படும் .... இது திராவிடத்தின் உறுதிமொழி


ஆரூர் ரங்
ஜூன் 23, 2024 09:24

இவங்கல்லாம் நேத்திக்கு காய்ச்ச ஆரம்பிச்ச அப்ரசண்டீஸ்தானே?. திடீர்ன்னு புடிக்கிற போலீச பாராட்டணும்.


கனோஜ் ஆங்ரே
ஜூன் 23, 2024 12:30

கள்ளக்குறிச்சியில... கள்ளச்சாராயம் காய்ச்சுறவன்கிட்ட.... உன் கட்சிக்காரன்தான் அதிகமான கட்டிங் வாங்கியிருக்கான்... அதுவும் போட்டு கொடுத்துடுவேன்... மிரட்டி மிரட்டியே ஓவர் கட்டிங்காம்...?


ராமகிருஷ்ணன்
ஜூன் 23, 2024 09:16

பல திமுக அமைச்சர்கள், அதிகாரிகள், போலீசார் என்று பலருக்கும் கிடைத்து கொண்டிருக்கும் லஞ்ச கமிஷன் பணம் கட்டாகி விட்டது. அவர்களின் வாழ்வாதாரம் குறைந்து விட்டது.


சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஜூன் 23, 2024 09:02

என்றைக்காவது கள்ளச்சாராயம் குடித்து பிற மதத்தினர் உயிரிழந்துள்ளனரா ?


Svs Yaadum oore
ஜூன் 23, 2024 09:44

சிறுபான்மை மத சட்டத்தில் அது ஹராம்.. விலக்கப்பட்டது பொங்கல் விற்பனை தீபாவளி விற்பனை என்று பண்டிகை நாட்களில் இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை செய்யும் இழிநிலைமை தமிழ் நாட்டில் மட்டும்தான்.. வள்ளலார் காலடி பட்ட வட தமிழ்நாடு மண்ணில் இந்த சீரழிந்த நிலைமை.. எப்போது இது ராமசாமி மண் என்று மாற்றினார்களோ அப்போதே தமிழன் கலாச்சாரம் மொத்தமும் தொலைத்து போனது..


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை