உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூபாய் 3.99 கோடி சிக்கிய விவகாரம்: விசாரணை வளையத்தில் பா.ஜ., நிர்வாகி

ரூபாய் 3.99 கோடி சிக்கிய விவகாரம்: விசாரணை வளையத்தில் பா.ஜ., நிர்வாகி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட, 3.99 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி கோவர்தனன், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், ஏப்., 6ல், தேர்தல் பறக்கும் படையினர், 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, சென்னையை சேர்ந்த நவீன், சதீஷ்; துாத்துக் குடியை சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் விசாரித்தனர். அந்த பணம், திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின், இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு மாற்றப் பட்டது. அவர்கள், சதீஷ், நவீன், பெருமாள், நயினார் நாகேந்திரன் உறவினர் பெருமாள் மற்றும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில், சென்னை நீலாங்கரையை சேர்ந்த, பா.ஜ., தொழில்துறை பிரிவு மாநில துணை தலைவர் கோவர்தனனை, விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.சென்னை பசுமை வழிச்சாலையில், பா.ஜ., தொழில்துறை பிரிவு மாநில துணை தலைவர் கோவர்தன் நடத்தி வரும் ஹோட்டலில் இருந்து தான், பணம் கைமாற்றப்பட்டதும், நயினார் நாகேந்திரனுக்காக, வாக்காளர்ளுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்க திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேருக்கு, 'சம்மன்' அனுப்ப சி.பி.சி.ஐ.டி., போலீசார் முடிவு செய்துள்ளனர்.முதற்கட்டமாக, கோவர்தனனிடம் விசாரிக்க, அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக உள்ளதால், ஓரிரு நாட்கள் கழித்து, அவரிடம் விசாரிக்க உள்ளனர். கோவர்தனன் அளிக்கும் வாக்குமூலம் அடிப்படையில், நயினார் நாகேந்திரனிடம் விசாரணை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
மே 06, 2024 13:22

கையும் களவுமாக பிடிபட்ட பிறகும் கூட தங்கள் தவறை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் எப்படி மக்களுக்கு நியாயமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?


MADHAVAN
மே 06, 2024 11:03

பிஜேபி என்பது ஊழலில் திளைத்து ஊளை விடும் நரி, தமிழகத்தில் இவனுங்க ஒருபிடி மண்ணைக்கூட தொடமுடியாது


Velan Iyengaar
மே 06, 2024 08:30

உள்கட்சி கூத்து இப்படி சந்தி சிரிக்குது கட்சியில் எவனாவது தன்னை மீறி ஜெயிச்சிடுவானுங்களோ என்ற பயம் சிலரை எந்த கேவலத்தையும் எய்ய வைக்குது இப்படி பட்ட கேவலமான கட்சி தலைமையை உலகத்தில் எங்குமே பார்க்கமுடியாது


Ramanujadasan
மே 06, 2024 11:25

திமுகாவில் இதை விட கேவலமாக பார்க்க முடியும், நீங்கள் உங்கள் கண்களை முதலில் திறவுங்கள்


Velan Iyengaar
மே 06, 2024 08:28

மானம் கப்பா விமானம் மற்றும் ரயில் எல்லாம் ஏறி பறந்து போகுது இதுல கேவலமான முட்டு இவனுங்களுக்கு மனசாட்சியே இருக்காதா>> கூலிக்கு எப்படி வேண்டுமானாலும் மாரடிப்பானுங்களா ?? சொந்த வீடு ன்று கூட பார்க்காமல் கூலி கொடுத்தால் ??


துணைவன்
மே 06, 2024 08:17

நாலு கோடின்னு சொன்னாங்களே. ஒரு லட்சத்தை அமுக்கிட்டு இப்போ 3.99 கோடிங்கறாங்களே... நானூறு ரூவாய்தான் எடுத்துட்டுப் போயிருப்பாங்க. பொய்வழக்கு 4 கோடிக்கு போடப்பட்டுள்ளது.


Vathsan
மே 06, 2024 12:21

நானூறு ரூபாய் தான் பிடிபட்டது என்றால், லட்சம் எப்படி அமுக்க முடியும் முட்டு குடுக்க முடிவு எடுத்தால் உருப்படியாக செய்


இசக்கிமுத்து,தூத்துக்குடி
மே 06, 2024 06:30

திமுகவிற்கும் பாஜகவிற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் திமுககாரனுங்க ஆயிரக்கணக்கான கோடிகளை அவனுக தொகுதிகளுக்கு செலவு பண்ணி கனகச்சிதமாக காரியத்தை முடுச்சிட்டானுக ஆனா இந்த பாஜககாரனுக பிசாத்து வெறும் நாலு கோடிய எப்படி தொகுதிக்கு கொண்டு வந்து பட்டுவாடா பண்ணணும்னு தெரியாம இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிறானுக இதுக்கு ஒரு நல்ல ஐடியா பண்ணி பேசாம திமுககாரனுங்ககிட்டயே உங்களுக்கு கமிஷன் கொடுத்துர்றோம் இந்த அமவுண்ட கொண்டாந்து எங்க தொகுதில சேர்த்துருங்கன்னு பேரம் பேசியிருந்தா அவனுங்களே பக்காவா கொண்டு வந்து கொடுத்திருப்பானுக இந்த விபரம் எல்லாம் தெரியாத பாஜக தத்திக இப்ப மாட்டிக்கிட்டு முழிக்கிதுங்க இதெல்லாம் ஒரு பாடமா எடுத்துக்கிட்டு 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படி நீக்கு போக்கா நடந்துக்கணும்னு தெரிஞ்சுகிட்டு புத்தியோட பொழச்சிக்கங்க...


Kasimani Baskaran
மே 06, 2024 05:32

பணம் கொடுத்து ஓட்டு வாங்கிய தீம்காவினர் மீது விசாரணை இல்லை - ஆனால் பணம் கொடுக்க திட்டமிட்டதாக ஹோட்டல் பணத்தை பிடித்து வைத்து விசாரிக்கிறார்களாம் நல்ல காமடி விட்டால் மோடி கூட விசாரணை வளையத்துக்குள் வருகிறார் என்று கூட உருட்டுவார்கள்


Saai Sundharamurthy AVK
மே 06, 2024 05:24

நள்ளிரவில் வந்து மின்வெட்டு ஏற்படுத்தி 300, 500 என்று கொடுத்து சென்ற அந்த இரண்டு திராவிட கட்சிகளின் நிர்வாகிகளை பிடிக்காமல் விட்டது தான் தேர்தல் பறக்கும் படையின் சாகசம். சரித்திரத்தில் இடம் பெறும்.


Dharmavaan
மே 06, 2024 05:10

இது திமுகவின் சதி வேலை இதற்கு தேர்தல் அதிகாரி உடந்தை கேவலம்


J.V. Iyer
மே 06, 2024 04:10

முன்பு தீய கட்சிக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள் மாடல் ஆட்சியின்போது பல்ட்டி அடிப்பார்கள் இதே ஆட்சியில் பாஜகவுக்கு எதிராக சாட்சிசொல்ல நிறையபேர் வரிசையில் காத்திருப்பார்கள் என்னே தீய மாடல் ஆட்சியின் மகிமை இந்த இருந்த ஆட்சி போனபின் எல்லோரும் பழையபடி எனவே இன்னும் இரண்டு ஆண்டுகால காத்திருக்கவும்


மேலும் செய்திகள்