உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மிதிவண்டி போட்டியில் கலந்து வெற்றி பெற மிதிவண்டி வழங்க வேண்டும்: அரசு பள்ளி மாணவி கோரிக்கை

மிதிவண்டி போட்டியில் கலந்து வெற்றி பெற மிதிவண்டி வழங்க வேண்டும்: அரசு பள்ளி மாணவி கோரிக்கை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வயலூர் ஊராட்சி கோடாங்கி பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாய கூலி தொழிலாளி செந்தில்குமார் பத்மா தம்பதியின் மகள் தேனருவி, இவர் குளித்தலை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த மாணவி அய்யர்மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற போது மிதிவண்டி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற பெற வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையில் மிதிவண்டி ஓட்டி பழகி வந்தார்.முதல் முதலில் காரைக்குடியில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்ட மிதிவண்டி போட்டியில் நான்காவது இடம் பெற்றார்.கரூர் மாவட்டத்தில். நடைபெற்ற போட்டியில் 14 வயதுக்குட்பட்ட போட்டியில் முதலிடம் பெற்றார்.தொடர்ந்து மாநில அளவில் பெரம்பலூரில் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பிடித்தார்.பின்னர். காரைக்குடியில் தனியார் அமைப்பின் மூலம் நடைபெற்ற போட்டியில் இரண்டாவது இடம் பெற்றார்.இரண்டாவது இடம் பிடித்ததால் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றார்.. தேசிய அளவில் ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் பங்கு பெற தனது தந்தையுடன் ஒரு வாரம் தங்கி இருந்தார்.அப்போது தனது மிதிவண்டி காணாமல் போனது.அங்கு வந்திருந்த தெரிந்த நண்பர் உதவியால் அவரது மிதிவண்டியில் போட்டியில் கலந்து கொண்டார் .இந்த போட்டியில் ஐந்தாவது இடம் பிடித்தார்.முறையான மிதிவண்டி இல்லாததால் வெற்றி வாய்ப்பு இழந்தார்.இந்த போட்டியில் கார்பன் மிதிவண்டி இருந்திருந்தால் முதல் இடத்தை பெற்று இருப்பார்.தன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விலை உயர்ந்த கார்பன் மிதிவண்டி வாங்க முடியாத நிலையில் இருந்து வருகிறார் .தன் பள்ளி ஆசிரியர்கள் சக போட்டியாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுங்கள் என்றும் உனக்கு தமிழக அரசு உதவி செய்யும் என்று என்னை ஊக்கப் படுத்தினர்.தமிழக முதல்வர் விவசாய ஏழை குடும்பத்தை சேர்ந்த எனக்கு கார்பன் மிதிவண்டி வழங்கினால் தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பெருமை சேர்ப்பேன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எனக்கு கார்பன் மிதிவண்டி வழங்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்தார்.பள்ளி சிறுமியின் தந்தை செல் எண் 9942142112


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை