உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சபாநாயகருக்கு எதிரான புகார்: முதன்மை நீதிபதிக்கு உத்தரவு

சபாநாயகருக்கு எதிரான புகார்: முதன்மை நீதிபதிக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த ஆண்டு, சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், சபாநாயகர் அப்பாவு பேசினார். அப்போது, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க.,வில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மறுத்து விட்டதாகவும் கூறியிருந்தார். சபாநாயகரின் பேச்சு, அ.தி.மு.க.,வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலர் பாபு முருகவேல், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பின், மனுவுக்கு எண் வழங்கி விசாரணைக்கு எடுக்க, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் பாபு முருகவேல் மனுத் தாக்கல் செய்தார்.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லீலேஷ் சுந்தரம், ''முதன்மை செஷன்ஸ் நீதிபதி முன், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார். இதையடுத்து, புகாரை கோப்புக்கு எடுத்து, சட்டப்படி நடவடிக்கையை தொடர, முதன்மை செஷன்ஸ் நீதிபதிக்கு, நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sankaranarayanan
ஜூன் 25, 2024 09:45

சபாநாயகர் நாற்பது பேர்கள் கட்சி தாவுகிறார்கள் என்று சொன்னது அப்போ இப்போ நாற்பதும் நமதே என்று நிரூபித்துக் காட்டி விட்டார்களே இதற்கே என்னய்யா செய்வீர்கள்


sethu
ஜூன் 25, 2024 09:29

மொத்த ஆ யோக்கியர்கள் கூடாரம் இன்றைய சட்டசபை அதன் தலைவருக்கு தகுதி எப்படி இருக்கணுமோ அப்படித்தான் இருக்கிறது இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது, மாபோசி போல மக்கள் மனம் கவரும் சபாநாயகர் யாரும் இல்லை.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 09:13

கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சியில் ஆறாக பாய்ந்தபோது இந்த சபாநாயகர் அது பற்றி விவாதிக்க அனுமதிக்கவில்லையாம். அதனால் எத்தனையோ சாவுகள். தனது தவறுக்கு மனம் வருந்தி தனது கையையே வெட்டிக் கொண்டார் மன்னர் பொற்கை பாண்டியன்.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 09:09

எங்களால் உருவான அரசு என்றார் இவர். எனவே இவரின் தவறுக்காக கட்சி அரசே பதவி விலக வேண்டும்.


Sankar Ramu
ஜூன் 25, 2024 08:26

விசாரணைக்கு சரத்து இருந்தா பதவி விலக வேண்டுமே அப்பாவு?


raja
ஜூன் 25, 2024 07:33

பொய் சொல்லுவதில் கோயபல்ஸ் ஐயும் மிஞ்சும் தித கேவல இழிபிறவிகள் ஆன ஒன்கொள் கோவால் புற கொள்ளை குடும்ப திருட்டு திராவிட கூட்டம்


GMM
ஜூன் 25, 2024 07:01

சட்டப்படி நடவடிக்கை எடுக்க விசாரணை துவக்கி விட்டால், சபாநாயகர் பதவியில் இருந்தால் தீர்ப்பில் குழப்பம் ஏற்படும்? அப்பாவின் மேல் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தயங்காது. சபாநாயகர் மேல் நடவடிக்கை எடுக்க தயங்கும். வேறு சபாநாயகர் இல்லையா?


ramani
ஜூன் 25, 2024 06:42

சாபாநாயகர் மக்கள் வாயில் காராசேவ் சாப்பிட்டுட்டு இருக்காங்க. எதை சொன்னாலும் நம்பிடுவாங்க என்று நினைத்து விட்டார் போலிருக்கிறது. நாற்பது அதிமுக எம்எல்ஏகள் திமுகவிற்கு தாவரோம் சொன்னாங்க லாம். இவரு தலைவரு வேண்டாம் என்று சொல்லிட்டாராம். நம்பற மாதிரியா இருக்கு?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை