உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொய் தகவலுடன் வழக்கு ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்

பொய் தகவலுடன் வழக்கு ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்

சென்னை:பொய் தகவலுடன் வழக்கு தொடர்ந்த, போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுனருக்கு, 50 ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விழுப்புரத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில், ஓட்டுனராக பணியாற்றியவர் சீனிவாசன்; கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் செய்த மனுவில், '1969 ஜூன் 10ல் பிறந்தேன்; பள்ளி மாற்றுச்சான்றிதழில், 1964ல் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டையிலும், இதே ஆண்டு தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை நான் கவனிக்கவில்லை. தவறுதலாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து, நான் அனுப்பிய மனுவை, போக்குவரத்துக் கழக நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு, பொய் மூட்டைகளை கொண்டுள்ளது. அவர் தாக்கல் செய்த ஆவணங்களை பரிசீலித்தால், 1வது வயதில் தட்டுத்தடுமாறி பள்ளிக்கு சென்று, 13 வது வயதில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானின் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. 50 ரூபாய் வழக்கு செலவுத் தொகை விதிக்கப்படுகிறது; அதை, மதுரையில் உள்ள காந்தி நினைவு மியூசியத்துக்கு நேரில்செலுத்தவேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை