உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது தான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?: சீமான் கேள்வி

இது தான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா?: சீமான் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அறப்போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்களை குற்றவாளிகள் போல் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் சீமான் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின் ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=svgnrcc4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களைச் சரிசெய்ய வேண்டும், உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுக்கும் துவக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்? ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட திமுக அரசால் நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதிவழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதைக் கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதிபோலக் கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

RAMESH
ஜூலை 30, 2024 10:34

வடை சுடுவதில் வல்லுநர்


Sugarcane
ஜூலை 30, 2024 09:39

ஆமாண்


Manickam Construction
ஜூலை 30, 2024 05:24

அரசியல் மேடைகள் வன்முறைச்சரங்களால் கோர்க்கப்பட்டு வார்த்தைவீச்சுக்களால் பொதுமக்கள் தாக்கப்படுவது சீமான் அரசியலுக்கு வந்தபின் தான்.


P. VENKATESH RAJA
ஜூலை 29, 2024 20:12

திமுக அரசிடம் பேச்சு மட்டும் தான் உள்ளது.. செயலில் ஒன்றுமில்லை


Vijayakumar Srinivasan
ஜூலை 29, 2024 22:12

அதுதான் மூலதனம்


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ