உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவிக்காக திருடி விட்டு, மன்னிப்பு கேட்ட ரொம்ப நல்ல திருடன்...!

மனைவிக்காக திருடி விட்டு, மன்னிப்பு கேட்ட ரொம்ப நல்ல திருடன்...!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் திருடச் சென்ற இடத்தில் வீட்டின் உரிமையாளருக்கு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்து விட்டு, திருடன் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. 'என்னை மன்னித்து விடுங்கள். எனது மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான் பணத்தை திருடிவிட்டேன்' எனக் கடிதத்தில் திருடன் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மெஞ்ஞானபுரத்தை சேர்ந்த சித்திரை செல்வின் (வயது 79) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவியும் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் மகனும் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சென்னையில் வசித்து வரும் இவரது மகனுக்கு குழந்தை பிறந்துள்ளதால், குழந்தையை பார்ப்பதற்காக கணவனும், மனைவியும் சென்னைக்கு சென்று இருந்தனர். வீட்டை சுத்தம் செய்ய வந்த, வேலைக்கார பெண் செல்வி வீட்டின் கதவுகள் உடைந்து இருப்பதை கண்டு, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.போலீசார் விசாரணையில், 60 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ஒன்றரை பவுன் எடை கொண்ட இரண்டு ஜோடி தங்க கம்மல், ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடன் திருடி சென்றது தெரியவந்தது. திருடன் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். 'என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில், பணத்தை திருப்பி தந்து விடுகிறேன். எனது மனைவிக்கு உடம்பு சரியில்லை. அதனால் தான் பணத்தை திருடிவிட்டேன்' எனக் கடிதத்தில் திருடன் குறிப்பிட்டுள்ளான். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூலை 03, 2024 19:37

அவர் பாஜகவின் மத்திய நிதி அமைச்சர் ஆகத் தகுதியானவர் தான்!


சுலைமான்
ஜூலை 03, 2024 21:59

அந்த திருடன் சுடலையாரின் பையன் சின்ன தத்தியையே மிஞ்சிடுவான்....


Kanagaraj M
ஜூலை 03, 2024 17:08

அரசு மருத்துவமனை தரம் குறைவால் இந்த மாதிரி திருட்டு நடந்துகொண்டுதான் இருக்கும்.தனியாருக்கு நிகராக அரசு மருத்துவமனை இருக்கவேண்டும்.


இசக்கிமுத்து,தூத்துக்குடி
ஜூலை 03, 2024 15:54

திமுகவினர் இவனை பார்த்தாவது திருந்த வேண்டும் அதாவது தன்னுடைய இயலாமையால் மனைவிக்காக திருட வந்தேன் என ஓபனாக ஒத்துக் கொண்டான் ஆனால் நீங்கள்?


vijay
ஜூலை 03, 2024 15:25

யாரெல்லாம் தலைப்பை பார்த்துட்டு, திருடவந்தவன் திருடாமல் மன்னிப்பு கடிதம் வச்சுட்டு போய்ட்டான் என்று நினைத்தீர்கள்?. நான் அப்படிதான் நினைச்சேன்.


Ram pollachi
ஜூலை 03, 2024 15:00

திருடன் தான் போலீஸை தேடி ஓடுகிறான். தொலைந்து போன நம்ம நகை கிடைக்காது, வேறு ஒருவரின் நகை நமக்கும், நம்முடைய நகை பிறருக்கு கிடைக்கும். இது தான் இன்றைய போலீஸின் சாதனை.


Ganesun Iyer
ஜூலை 03, 2024 14:44

2ஜி திருடர்கள் உள்ள நாட்டில் இப்படியும் நல்ல திருடன், திருப்பி தருவதாக. அதுவும் மனைவிக்காக டாஸ்மாக்கு அல்ல .....


Sakthi Sakthiscoops
ஜூலை 03, 2024 14:24

கடவுளே நடத்துகிறார். எல்லையில்லா வல்லமை கொண்டவன் எளிய உயிர்களை வதைப்பதும் ஏனோ, உயிர்களை நிம்மதியாக வாழ வைக்கும் தகுதியற்ற இறைவன் தொடர்ச்சியாக உயிர்களை படைப்பதும் ஏனோ. தோல்வியாளனே படைப்பை நிறுத்து. பிறவிகளை நிறுத்து தெய்வமே


Thanga Durai
ஜூலை 03, 2024 14:08

நம்ம போலீஸ் இதெல்லாம் சீக்கிரம் கண்டு பிடித்து தண்டனை வாங்கி கொடுப்பார்கள்..


Pandi Muni
ஜூலை 03, 2024 13:56

கடிதம் எழுதுவதில் கருணாநிதியையும் மிஞ்சிருவார் போலருக்கே. இப்படித்தான் வந்தவன் ஏமாத்துனான் தமிழன் ஏமாந்தான்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை