உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கடைகளில் வெளிநபர் இருந்தால் நடவடிக்கை

மதுக்கடைகளில் வெளிநபர் இருந்தால் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : மதுக்கடைகளில் நிர்வாகத்திற்கு தொடர்பில்லாத நபர்கள் பணிபுரிந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேலாளர்களை டாஸ்மாக் அறிவுறுத்திஉள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும், 4,820 மதுக்கடைகளில், 25,000 பேர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். சில ஊழியர்கள், வேலைக்கு ஒழுங்காக வராமல், வேறு வேலைகளை கவனிப்பதாகவும், தங்கள் சார்பில், நண்பர்கள், உறவினர்களை கடையில் நியமித்து இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த முறைகேடு, சென்னை உட்பட பல மாவட்டங்களில் நடக்கிறது. மதுக்கடைகளில், மது பாட்டிலுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக, 30 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. அந்த பணத்தில் இருந்து, தங்களின் பணியை செய்யும் வெளிநபர்களுக்கு தினமும், 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது:

கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, நிர்வாகத்திற்கு தொடர்பு இல்லாத நபர்கள் பணிபுரிந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும், வெளி நபரை நியமித்த ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்குமாறும், அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர். தவறு கண்டறியும் பட்சத்தில், ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். ஒவ்வொரு மதுக்கடையிலும் தினமும் சராசரியாக, 2.50 லட்சம் ரூபாய் - 3 லட்சம் ரூபாய் வரை மதுபானங்கள் விற்பனையாகின்றன. இது, விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ram pollachi
மே 27, 2024 16:30

தமிழக அரசின் மற்ற துறைகளில் இதை போன்றே வெளி நபர்கள் தான் நிர்வாகம் செய்கிறார்கள்... கேட்டால் உதவியாளர்கள் என்கிறார்கள்


துருவன்
மே 27, 2024 11:34

மதுக்கடை வேலையே ஜெயில்ல இருக்கறதுக்கு சமம். அதுல சாக்கடையில்.மொய்க்கும் ஈ மாதிரி ஒரு கும்பல் எப்பவும் நிக்கும்.


Kumar Kumzi
மே 27, 2024 10:57

யாருய்யா அது விடியலுக்கு கொண்டாட்டம்


Lion Drsekar
மே 27, 2024 10:09

அதிக விலைக்கு விற்பவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் , பழைய லஞ்ச லாவண்யம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறதே , வந்தே மாதரம்


Bye Pass
மே 27, 2024 10:07

ஆதம்பாக்கம் டாஸ்மாக் பக்கத்தில் இன்னொரு இடத்தில டாஸ்மாக் நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் தங்கு தடையின்றி சரக்கு விற்பனையாகிறது ..பக்கத்திலேயே போலீஸ் பீட் ...


Kasimani Baskaran
மே 27, 2024 09:04

ஒரு சாராயக்கடை கூட நேர்மையாக நடத்த முடியாத விடியல் மொத்த இந்தியாவையும் ஆளத்துடிப்பது எதற்க்காக என்று உலகமே அறியும். இவர்களுக்கும் பல்லக்குத்தூக்கும் தன்னை திராவிடன் என்று நாபிக்கொண்டு இருக்கும் தமிழனும், தீம்காவை ஆதரிக்கும் இந்துக்களும் திருந்த வேண்டும்.


chennai sivakumar
மே 27, 2024 08:00

ஒண்ணும் பண்ண முடியாது. Goodluck


tmranganathan
மே 27, 2024 07:55

இந்தடாஸ்மாக்கின் ஏற்பாடு ஊரறிந்த உண்மை.திமுககாரங்கள்தான் மிரட்டி டாஸ்மாக் கல்லாவில் உட்கார்ந்து பணம் சுருட்டிகிறார்கள். செந்தில்பாலாஜி காலத்தில் பொட்டலிக்கு பாத்துருப்பீஸ் கூட. இப்போ முப்பதா? சீர்கேட்டின் வெளிப்பாடு அரசு நிர்வாகம்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ