| ADDED : ஏப் 13, 2024 12:19 AM
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கேரளா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கூடுதலாக 10,000 போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 20,000 ரவுடிகள் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். பிரச்னைக்குரியவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள 4,000 பேரிடம், உறுதிமொழி பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் கூறுகையில், 'மாநிலம் முழுதும் உரிமம் பெற்று வைத்திருந்த 17,853 துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளன. 'பிரதமர் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பிரசாரம் செய்வதால், உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன' என்றனர்.