உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கு இன்று பொதுப்பிரிவு கலந்தாய்வு

சென்னை: இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், 433 பொறியியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, 1.79 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வாயிலாக, இணைய வழியில் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு கலந்தாய்வுக்கு, 2 லட்சத்து 9,645 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1 லட்சத்து 99,868 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல், ஜூலை 10ல் வெளியானது. மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22ல் துவங்கியது.முதற்கட்டமாக, முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு, ஜூலை 22 முதல் 27- வரை நடந்தது.சிறப்புப் பிரிவில் மொத்தம் 9,639 இடங்கள் இருந்த நிலையில், 836 இடங்கள் மட்டுமே நிரம்பின. இதில், 92 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் நிரம்பின.பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது. முதல் சுற்று கலந்தாய்வு ஆக., 10- வரை நடக்கிறது. இதில், 26,654 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.இதுதொடர்பான கூடுதல் விபரங்களை, https://www.tneaonline.org/ என்ற வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். மூன்று சுற்றுகளாக நடக்கும் இந்த கலந்தாய்வு, செப்., 3ல் நிறைவு பெறுகிறது.தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று துவங்குகிறது. இந்த கலந்தாய்வு ஆகஸ்ட் 10 வரை ஒரே சுற்றாக நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

GMM
ஜூலை 29, 2024 11:58

433 பொறியியல் கல்லூரிகள் என்றால், 4330 பாலிடெக்னிக், 43300 ITI, 433000 skilled labour பயிற்சி நிலையம் தேவை. கறுப்பு பணத்தை கொண்டு உருவாக்கிய கல்லூரிகள் மதிப்பு இழந்து வருகின்றன. தமிழக வருவாய் இலவச கல்வி, மருத்துவமனைகளுக்கு போதாது. மருத்துவ, பொறியியல் கல்லூரிகளை தானமாக பின்தங்கிய மாநிலங்களுக்கு ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் சேர்க்கை இல்லாத பொருட்காட்சி கல்லூரிகள் உண்டு. முற்பட்ட சமூகத்திற்கு தான் பொது பிரிவு. பொதுபிரிவில் இட ஒதுக்கீடு பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தகுதி. ஆனால் முற்பட்ட மாணவருக்கு இடஒதுக்கீடு கட்டாயம் இல்லை. பாகுபாட்டை நீதிமன்றம் கவனிக்க நேரம் இல்லை. மறவர், வன்னியர், நாடார், தலித், இஸ்லாம்.. மக்கள் இட ஒதுக்கீடு மூலம் அதிக பலன் பெற்று விட்டனர். முற்பட்ட சமூகம் உட்பட குறைந்த எண்ணிக்கை சமூகத்திற்கு மட்டும் இனி இட ஒதுக்கீடு என்று சமூக நீதி பேசும் திராவிடம் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:19

இதற்குமுன் படித்த 80 சதவீதம் பேர் கூரியர் டெலிவரி நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றுகின்றனர். அதில் நிறைய பேர் அரசுக் கல்லூரிகளில் படித்தவர்கள். மக்களின் வரிப்பணம்? 90 சதவீதத்துக்குக் குறைவாக மார்க் எடுத்தவர்களை ITI, பாலிடெக்னிக்கில் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை