மேலும் செய்திகள்
சென்னையில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ!
4 hour(s) ago
ஜனவரி 6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
8 hour(s) ago | 26
சென்னை:ஓட்டு எண்ணிக்கையின் போது, ஐந்து ஓட்டுச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பதிவான 'விவிபேட்' ஒப்புகை சீட்டுகளை எண்ண, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகள் மற்றும்விளவங்கோடு சட்டசபை தொகுதி ஓட்டுகள், அடுத்த மாதம் 4ம் தேதி எண்ணப்பட உள்ளன. சட்டசபை தொகுதி வாரியாக, 14 மேஜைகளில் ஓட்டுகள் எண்ணப்படும். எண்ணிக்கை முடிந்ததும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், ஐந்து ஓட்டுச்சாவடிகளை தேர்வு செய்து, விவிபேட் இயந்திரத்தில் அச்சிடப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும்.இந்த சரிபார்ப்பு, தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே மாறுபாடு இருந்தால், ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையே இறுதியானது. முழு செயல் முறையும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதும், வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள், தேவைப்பட்டால் அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுமாறு, தேர்தல் அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
4 hour(s) ago
8 hour(s) ago | 26