உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,விற்கு வழிவிட்டு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பு: உதயநிதி பிரசாரம்

பா.ஜ.,விற்கு வழிவிட்டு இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பு: உதயநிதி பிரசாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விழுப்புரம்: பா.ஜ.,விற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது என அமைச்சர் உதயநிதி கூறினார்.விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிகிறது. தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, தும்பூர் கிராமத்தில் உதயநிதி பேசியதாவது: எதிர்க்கட்சித் தலைவருக்கு மக்களைப் பார்த்து பயம். பா.ஜ., வை பார்த்து பயம். பா.ஜ.,விற்கு வழிவிட்டு, விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணித்துள்ளது. தொடர் தோல்வி பயத்தால் அ.தி.மு.க., விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

1 லட்சம் ஓட்டுகள்

நீட் விவகாரத்தில் தி.மு.க., அரசு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. நீட் தேர்வு வேண்டும் என சொல்லும் பா.ஜ.,வோடு பா.ம.க., கூட்டணி வைத்துள்ளது. விக்கிரவாண்டி தி.மு.க., வேட்பாளரை, 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி. புதுமை பெண் திட்டத்தின் கீழ், 2.72 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், 1.16 கோடி பேருக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. காலை உணவு திட்டம் மூலம் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

sundar
ஜூலை 08, 2024 21:59

If the people of TASMAC NADU have any self respect, they should vote against the DMK govt.


பேசும் தமிழன்
ஜூலை 08, 2024 18:44

உங்கள் பங்காளி கட்சி அதிமுக.... அவர்கள் நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தான் தேர்தலை புறக்கணித்ததாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்..... அது உண்மையா ???


Rajasekaran
ஜூலை 08, 2024 17:50

பாஜக விற்கு வழிவிட்டது அதிமுக சரி. அந்த கள்ளக்குறிச்சி கள்ள சாராயத்திற்கு வழிவிட்டது யாருங்க? சாராயம் குடிக்க சாராயக்கடை திறந்து விட்டது யாரு? இதையும் சொன்னா நல்ல இருக்கும்.


கத்தரிக்காய் வியாபாரி
ஜூலை 08, 2024 16:45

தேர்தல் ஆணையத்துக்கு மிச்சர் பார்சல் அனுப்பியாசா?


G Mahalingam
ஜூலை 08, 2024 16:05

500 ரூபாய்க்கு கூட்டிய கூட்டம்.


Maheesh
ஜூலை 08, 2024 15:48

மக்களை குழப்பும் போது கூட ஒரு லாஜிக் வேணாமா? அங்கு பாஜக போட்டியிடவில்லை, இப்படி அந்நியாத்திற்கு லாஜிக் இல்லாமல் பேசினால் சின்ன அடிமைகளும் சித்தாந்த அடிமைகளும் விழித்து விட மாட்டார்களா?


RAAJ 68
ஜூலை 08, 2024 14:45

ஆமாம் அப்படித்தான் உங்களுக்கு தைரியம் இருந்தால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தனியாக நின்று காசு பணம் எதுவும் கொடுக்காமல் ஜெயித்துக் காட்டுங்கள் பார்க்கலாம். டெபாசிட் கூட வராது. மக்களை பணத்தால் அடித்து அடாவடி செய்து ஜெயிப்பது ஒரு வெற்றியே அல்ல.


mindum vasantham
ஜூலை 08, 2024 14:43

அதிமுகவுக்கு நல்ல தலைவர் வர வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை திமுக மக்களுக்கு என்ன நல்லது செய்தனர் என்று சொல்ல வேண்டும் அதை விடுத்தது


பாரதி
ஜூலை 08, 2024 14:36

வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஓட்டு போட்டு திராவிட மாண்பை காப்பாற்னுவார்கள் விக்கிரவாண்டி


RajK
ஜூலை 08, 2024 14:28

மறுபடியும் மக்களை குழப்ப ஆரம்பித்துவிட்டனர். விக்கிரவாண்டிக்கு பக்கத்தில் நடந்துள்ள கள்ளசாராய சாவிற்கு விக்கிரவாண்டி தொகுதி மக்கள்தான் தீர்ப்பு எழுத வேண்டும். இப்பவும் எந்த விழிப்புணர்வும் இல்லை என்றால் எப்பவும் இல்லை. மக்கள் தாங்கள் அடிமையா இல்லை சுயபுத்தி உள்ளவர்களா என்று தேர்தல் முடிவில் தெரியும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை