உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் காலி

7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் காலி

சென்னை: தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.லோக்சபா தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள அ.தி.மு.க., 11 தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும், ஒரு தொகுதியில் நான்காம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க., 35 தொகுதிகளில் போட்டியிட்டு, 20.46 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு பின், லோக்சபாவில் அ.தி.மு.க.,வுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் இ.பி.எஸ்., அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி 7 தொகுதிகளில், அதிமுக டெபாசிட் இழந்துள்ளது கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள்:

1. தென்சென்னை, 2. கன்னியாகுமரி, 3. புதுச்சேரி, 4. தேனி, 5. தூத்துக்குடி, 6. திருநெல்வேலி, 7. வேலூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Narayanan
ஜூன் 06, 2024 14:11

எடப்பாடி பழனிசாமி நிலவரத்தை புரிந்து கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறுபான்மையினர் ஓட்டுக்களை வைத்தே வெற்றி பெற்றுவிடலாம் என்று தப்புகணக்கு போட்டது மட்டும் இல்லை வேறு ஒருவரின் அனுமதியில்லாமல் அவரின் பதவியை பறித்து அசிங்க படுத்தினதும் , பிஜேபி உறவை கைவிட்டதாலும் முதல் கட்ட தேர்தல் இந்த திமுகவை வைத்துக்கொண்டு நடத்தியது மாபெரும் தவறு


N DHANDAPANI
ஜூன் 05, 2024 20:00

அப்பாவி மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற இனிமேலாவது அண்ணா திமுக தலைமை தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும் தலைவர் ஒருவராக இல்லாமல் ஒரு குழுவாக இருந்தாலும் சரிதான் ஆனால் மாநிலம் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கும் பொழுது இவ்வாறு கட்சி செல்வது சரியல்ல


ramanujam
ஜூன் 05, 2024 16:50

எடப்பாடி கேட்பார் பேச்சு கேட்டு தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார்...


saravan
ஜூன் 05, 2024 14:09

அதிமுக வை அழித்துக்கொண்டிருக்கும் எடப்பாடி வாழ்க


HoneyBee
ஜூன் 05, 2024 13:29

என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்ணடாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு. இபிஎஸ் கதை இனி முடிந்தது


ராஜவேல்,வத்தலக்குண்டு
ஜூன் 05, 2024 13:28

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இவர்களின் ஆவி எடப்பாடியை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக என்ற கட்சிக்கு தலைவராக இருப்பது முற்றிலும் முரணானது எனவே அவர் தன் பதவியை ராஜினாமா பண்ணி விட்டு வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.


தமிழ்
ஜூன் 05, 2024 14:22

இதே ஜெயலலிதா இருந்திருந்தால், பிஜேபி உட்பட மற்ற கட்சிகளெல்லாம் போயஸ் கார்டன் கேட்டின் வெளியே அவரது அப்பாய்ன்மெண்ட்டுக்காக காத்துக்கொண்டு இருந்திருக்க வேண்டும்.


ram
ஜூன் 05, 2024 13:20

எடபடிதான் முக்கிய கரணம், பிஜேபி மதவாத கட்சி என்று கூட்டணிக்கு வரவிடாமல் செய்தது, பிஜேபி இல்லையென்றால் சிறுபான்மை வோட்டு வரும் என்று கனா கண்டது. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசை பட்டது, இந்த கட்சிக்கு சிறுபான்மை வோட்டும் வரவில்லை, திருட்டு திமுகவை பிடிக்காதவர்கள் இவருக்கு வோட்டு போட்டவர்கள் இந்த தேர்தலில் பிஜேபிக்கு வோட்டு வோட்டு விட்டார்கள். வரும் காலங்களில் சிறுபான்மை நபர்களின் காலை புடிக்காமல், இருக்கும் ஹிந்துக்கள் வோட்டை அறுவடை செய்யுங்கள்.


rama chandran
ஜூன் 05, 2024 13:19

ராமநாதபுரம் கணக்கில் வரலை


Swaminathan L
ஜூன் 05, 2024 13:15

ஏறத்தாழ ஒன்றரை-இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி இந்தத் தேர்தலில் இம்மாதிரியான முடிவுகளைச் சந்தித்திருப்பதிலிருந்து 1 தொண்டர்களின் உண்மை எண்ணிக்கை மிகக் குறைவு அல்லது 2 தொண்டர்களின் பல இலட்சம் வாக்குகள் பாஜக கூட்டணிக்கு இதர கட்சிகளுக்கோ விழுந்திருக்க வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தல் வரை தொண்டர்களும், கட்சிப் பிரமுகர்களும் கட்சியை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ள பெரும்பாடு படவேண்டியிருக்கும். சிறுபான்மை ஓட்டுகள் திமுக கூட்டணிக்கே விழுந்துள்ள நிலையில், அதிமுக-பாஜக திரை மறைவு கூட்டணி, தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜகவை ஆதரிக்கும் என்கிற திமுக பிரச்சாரம் வாக்காளர்களிடம் நன்றாக எடுபட்டுள்ளது என்றே தோன்றுகிறது.


karthikeyan
ஜூன் 05, 2024 12:59

EPS, OPS, TTV இவங்க மூணுபேரும் ஒண்ணா இருந்த மட்டும்தான் ADMK னு ஒரு கட்சியை காப்பாத்த முடியும். இதுமட்டும் நடக்கலைனா ADMK னு ஒன்னு இல்லாம போயிரும்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி