உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பால் விநியோகம் நிறுத்தம் முகவர்கள் சங்கம் கண்டனம்

பால் விநியோகம் நிறுத்தம் முகவர்கள் சங்கம் கண்டனம்

சென்னை: 'ஆவின் பால் பொருட்கள் வாங்காததால், ஆவின் பால் விநியோகத்தை நிறுத்தம் செய்த பாலகங்களுக்கு, பால் விநியோகத்தை தொடர வேண்டும்' என, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் பொன்னுசாமி, வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்கள், ஆவின் பால் பொருட்கள் வாங்கவில்லை எனக்கூறி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு, பால் விநியோகத்தை நிறுத்த, வட்டார அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.ஆவின் நிர்வாகம் தரப்பில் இருந்து, தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு, நெய், வெண்ணெய் உள்ளிட்ட பால் சார்ந்த உபபொருட்கள், மிகக்குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன. அந்நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, குறைந்த விலைக்கு விற்கின்றன. இதனால், பால் முகவர்கள் நடத்தும், ஆவின் பாலகங்களில், ஆவின் பால் பொருட்கள் விற்பனை ஆவதில்லை. அவை தேக்கம் அடைந்து, காலாவதியாகி விடுகிறது. அவற்றை, ஆவின் நிர்வாகம் மாற்றித் தருவதில்லை. இதனால், பால் முகவர்கள் பெரும் நிதி இழப்பை சந்திக்கின்றனர். இதைத் தவிர்க்க, ஆவின் பால் பொருட்கள் வாங்குவதை, பால் முகவர்கள் தவிர்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆவின் பால் பொருட்கள் வாங்காத பால் முகவர்களுக்கு, ஆவின் பால் விநியோகத்தை நிறுத்தினால், ஆவின் பால் பொருட்களை வாங்குவர் என்பது அதிகாரிகளின் எண்ணமாக இருக்கிறது.அவர்கள் பால் முகவர்களின் பிரச்னையை ஆராய்ந்து, அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் பால் நிறுத்தப்பட்ட, ஆவின் பாலகங்களுக்கு, ஆவின் பால் விநியோகத்தை தொடர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை