உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும்! -

சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும்! -

கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை எடுக்க வேண்டும். கேரளத்தில் இருந்து தமிழகத்திற்குள் வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான ஊழியர்கள் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள, என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அன்புமணிபா.ம.க., தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ