உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா செயலி அறிமுகம் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

அப்பா செயலி அறிமுகம் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி அறிக்கை: சட்டப்படி எந்த துறை சார்ந்த அமைப்பாக இருந்தாலும், அதன் பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது, 'தங்கிலிஸ்'சில் எழுத வேண்டும். தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்ட 'அப்பா' செயலியின் விரிவாக்கம், 'அனைத்துப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கூட்டமைப்பு' தான். அதை சுருக்கினால், அ.ப.பெ.ஆ.கூ., என்ற பெயர் தான் வர வேண்டும். ஆனால், அப்பா என்று அழைக்க வேண்டும் என திட்டமிட்டு பெயர் சூட்டியுள்ளனர். அதிகாரிகள் விதிகளை மீறி செயல்பட்டு உள்ளனர். அப்பா என்பவர், பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுத்தரும் கதாநாயகன். ஆனால், இங்கு பிள்ளைகளுக்கு, சட்டத்தை தங்களுக்கு ஏற்றவாறு வளைக்க சொல்லித் தருகிறார் இந்த அப்பா.தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: உண்மையான தமிழ் பற்று இருந்தால், 'அ.ப.பெ.ஆ.,' செயலி என்று தமிழிலோ, 'ஏ.எஸ்.பி.டி., செயலி' என்று ஆங்கிலத்திலோ வெளியிட்டிருக்க வேண்டும். இப்படி, தாய் தமிழை உருக்குலைய செய்வது தான் தி.மு.க., மாடலா?இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி